இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் என்றே சொல்லலாம். இவரது இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் என அனைத்துமே வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்றிய நான்கு படங்களுமே மெகா ஹிட்.
அழுத்தமான கதை மற்றும் கதாபாத்திரம், இந்த இரண்டிற்காகவுமே அனைவராலும் பாராட்டப்படகூடிய இயக்குனராக வலம் வருகிறார்.
நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் நான்கு. கடைசியாக வெளியான அசுரன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றி பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு பட்டி தொட்டி என மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது.
இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூர்யா மற்றும் சூரியை வைத்து தொடர்ந்து 2 படங்கள் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் விசாரணை, என்.எஹ்.47 படங்களைப தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் கதிரேசனுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து அப்படத்திற்கு கதை , திரைக்கதை எழுத உள்ளார் வெற்றிமாறன். யார் இயக்குனர் என்று இன்னும் முடிவாகவில்லை.
இதுகுறித்த அதிராப்பூர்வமான தகவலை ஃபைவ் ஸ்டர் கதிரேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 04) வெளியிட்டுள்ளார்.