கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. தமிழில் ’பொன்மகள் வந்தாள்’ ’பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் பாலிவுட் உட்பட பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது.
இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் மொத்தம் 9 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த படங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
- மிஸ் இந்தியா: கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ரிலீஸ் தேதி: நவம்பர் 4
- கதம்: தெலுங்கு த்ரில்லர் திரைப்படம் ரிலீஸ் தேதி: நவம்பர் 6
- லட்சுமி: ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடித்த திரைப்படம் ரிலீஸ் தேதி: நவம்பர் 9
- சூரரை போற்று: சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கிய திரைப்படம் ரிலீஸ் தேதி நவம்பர் 12
- அனகங்கா ஒ அதிதி: தெலுங்கு சஸ்பென்ஸ் படம் ரிலீஸ் தேதி நவம்பர் 13
- மா விந்தா கதா வினுமா: தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் தேதி நவம்பர் 13
- சாலாங்: இந்தி காமெடி திரைப்படம் ரிலீஸ் தேதி நவம்பர் 13
- லூடு: இந்தி ஆக்சன் திரைப்படம் ரிலீஸ் தேதி நவம்பர் 13
- மூக்குத்தி அம்மன்: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் ரிலீஸ் தேதி நவம்பர் 14