மோகன் ஜி இயக்கத்தில் பல தடைகளுக்கு பின் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் திரௌபதி. Crowd Funding முறையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம். சுமார் 60 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 18 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.
2020ம் ஆண்டில் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது திரௌபதி திரைப்படம்தான் என அடித்து கூறலாம். ஆனால் விமர்சன ரீதியாக அந்த படத்துக்கு எல்லா தரப்புகளில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்களே வந்தன.
இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது அதை விஜய் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது.