கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை
ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான ‘கபடதாரி’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து முழு வீச்சில் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து ஜி. தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘கபடதாரி’. வரும் நவம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ‘கபடதாரி’ குழுவினர், திரையரங்குகள் திறப்புகுறித்த அறிவிப்பு வெளியான உடன், திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது குறித்து அறிவிக்க உள்ளார்கள்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த்ராவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளார்கள்.சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை கிரேட்டிவ்எண்டர்டெயின்மெண்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.சைமன் கே கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று (நவம்பர் 01) சிபிராஜ் படத்தின் டப்பிங் வேலைகளை சிபிராஜ் முடித்துள்ளார். இதையடுத்து படம் சென்சார் போர்டு சான்றிதழுக்கு அனுப்ப வேலைகள் முழுவீச்சில் இரவு பகலாக நடந்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.