V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் !

தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் !

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆவார். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவரது நடிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் தனுஷ் மரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனது மூன்றாவது இந்தி திரைப்படமான அத்ரங்கி ரே போன்ற பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன.

தனுஷின் 43 வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குவார் என கடந்த மார்ச் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அவர் துருவங்கள் 16 படத்துடன் இயக்குனராக அறிமுகமானார், மேலும் அவரது இரண்டாவது திரைப்படமான மாஃபியா கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இவரது இரண்டாவது படமாக இயக்கிய நரகாசூரன் இன்னும் வெளியிடப்படவில்லை.

Image

தற்காலிகமாக டி 43 என அழைக்கப்படும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர், இப்படம் ஒரு த்ரில்லர் என்று கூறப்பட்டாலும், கார்த்திக் நரேன் பிரபல மலையாள எழுத்தாளர்களான சுஹாஸ் – ஷார்பூவுடன் இணைந்து கொண்டடு பணியாற்றுகிறார். இவர்கள் வைரஸ் மற்றும் வரதன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த மாதம் தனுஷின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த மாளவிகா மோகனன், ‘உங்களுடன் பணிபுரிய மிகவும் ஆவலாக இருக்கிறேன் ! நம் இருவரையும் விரைவில் யாராவது ஒரே படத்தில் தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன்’ என கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த தனுஷ் ‘நானும் ஆவலாக இருக்கிறேன்’ என கூறி இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்போது கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் இணையும் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாளவிகா மோகனன் சூப்பர்ஸ்டார் நடித்த “பேட்ட” மற்றும் தளபதி விஜய் யின் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments