டாக்டர் நோவில் கலக்கிய முதல் ஜேம்ஸ் பாண்ட்டும், பழம்பெரும் ஹாலிவுட் நடிகருமான சீன் கானரி இன்று (அக்டோபர் 31) தனது 90வது வயதில் காலமானார்.
ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் படங்களில் முதன்முதலில் ஜேம்ஸ் பாண்டாக தோன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். டாக்டர் நோ, ஃபிரம் ரஷ்யா வித் லவ், கோல்ட் பிங்கர், தண்டர்பேர்டு, யூ ஒன்லி லைவ் டிவைஸ், டைமண்ட்ஸ் ஆர் பாரேவர் என மொத்தம் ஆறு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்துள்ளார்.
1988ம் ஆண்டு ‘The Untouchables’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றார். ஆஸ்கர் விருதை தவிர தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் பல சர்வேதச விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
சீன் கானரி யின் மறைவு குறித்து பதிவிட்ட அபிஷேக் பச்சன் “நாம் மற்றுமொரு மிக சிறந்த ஆளுமையை இன்று இழந்துள்ளோம். ஹைலண்டர் படம் பார்த்ததுக்கு பிறகு அவர் எப்போதும் அழியாமல் இருப்பார் என நான் நம்பினேன். அவரது அற்புதமான பணிகளின் வழியாக அவர் நம்முடன் எப்போதும் இருப்பார். உங்களை விட சிறந்த பாண்ட் இருக்க முடியாது” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.