V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனர் அட்லியின் 'அந்தகாரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு !

இயக்குனர் அட்லியின் ‘அந்தகாரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

பல சின்ன பட்ஜெட் படங்கள் OTT-ல் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் படங்களை OTT-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்ததாக OTT-ல் வரவிருப்பது பிரபல பிரம்மாண்ட இயக்குனர் அட்லீ தயரித்துள்ள ‘அந்தகாரம்’ . இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலிஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

Image

இயக்குனர் அட்லி தயாரிப்பில் விக்னேஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் ‘அந்தகாரம்’. இப்படத்தில் வினோத் கிஷன் மற்றும் ‘கைதி’ புகழ் அர்ஜுன் தாஸ், பூஜா, குமார் நடராஜன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊரடங்கு காரணமாக படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் படத்தை OTT-ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த படம் நவம்பர் 24ம் தேதி நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments