தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
தாஜ்மஹால் படத்தின் மூலம் 1999ம் ஆண்டு கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. தாஜ்மஹால் படத்தை பாரதிராஜா எழுதி இயக்கி பெரும் பொருட்செலவில் தயாரித்தார். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் மிக பெரிய ஹிட் ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அவரால் உச்ச நட்சத்திரமாக பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.
இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். சூப்பர்ஸ்டார் நடித்த ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற எந்திரன் முதல் பாகத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் மனோஜ்.
பாரதிராஜா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற “சிவப்பு ரோஜாக்கள்” படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பல வருடங்களாக அந்த முயற்சி கை கூடாமலே போனது.
இந்நிலையில் லிப்ரா புரொடக்ஷன் ரவி தயாரிக்கும் புதிய படத்தை அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் விவரங்கள் எல்லாம் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Happy to share @LIBRAProduc Set to launch the #ProductionNo7 Directorial Debut of @manojkumarb_76 with blessings of @offBharathiraja
Interesting & Impressive details of Cast & Crew revealing soon
Shoot Starts & Release on 2021 @onlynikil @lightson_media pic.twitter.com/Cthqdkd7UG— LIBRA Production (@LIBRAProduc) October 31, 2020