பிக் பாஸ் சீசன் 4 தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 3 வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க புதிய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களுக்குள் போட்டியை வரவைத்துள்ளார் பிக்பாஸ். அத்துடன் நாமினேஷன் ஆரம்பமாகியுள்ளதால் இனி ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். கடந்த வாரம் நடிகை ரேகா வெளியே அனுப்பப்பட்டார்.
வார இறுதியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரும் கமல் அவர்கள் நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவராலும் பார்க்கப்படும்.
இந்நிலையில் நேற்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் அனிதா ஜவ்வு போல பேசி சக போட்டியாளர்களை போர் அடிக்க செய்கிறார். அனிதாவின் அறுவை தாங்காமல் அஜீத், ஷிவானி நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ரம்யா பாண்டியன், பாலா, ஜித்தன் ரமேஷ் என அனைவரும் முக சுளிக்க ஆரம்பித்து விட்டனர். சம்யுக்தா ஒரு படி மேலே சென்று ரொம்ப பெருசா போகுது நிறுத்திக்கோ என கூறியுதும் அனைவரும் அனிதாவை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர். பின் சாரி சொல்லி விட்டு ஒக்காந்து விட்டார்.
பேச சொன்ன 1நிமிடம் இல்லை 2நிமிடம் பேசலாம் அதற்கு ன்னு இப்படியே பேசுவீங்க அனிதா ?? முடியல மா கண்ட்ரோல் பண்ணிக்கோங்க. இனிமேல் நிகழ்ச்சி கலகலப்பா போகும் என எதிர்பார்க்கலாம். இனி சூடு பிடிக்கும் என நம்பலாம்.
#Day26 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/XcwFA2Tmwt— Vijay Television (@vijaytelevision) October 30, 2020