V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனர் கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா.

இயக்குனர் கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா.

இயக்குனர் கே பாக்யராஜிடம்  சித்து பிளஸ் 2 மற்றும் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கலை இயக்குனர் “DRK கிரண் நடித்திருக்கும் குறும்படம் அல்வா .கோவையைச் சேர்ந்த இவர் சினிமா ஆர்வத்தால் பாக்யராஜிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்தார் மற்றும் அவரின் தாயார் ‘மல்லிகா மூவிஸ்’ என்ற பெயரில் பல குறும் படங்களை தயாரித்து இயக்க ஆரம்பித்தார்.

இந்தியில் உருவாகிக் கொண்டிருக்கும் காந்திஜியின் வரலாற்று படத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளத்தின் மொழிமாற்று வசனத்தை இவர் எழுதி இருக்கிறார். இவர் இயக்கிய ‘ஒரு நாள்’, ‘இருவர்’, ‘சொந்த பந்தம்’ போன்ற குறும்படங்கள் பல விருதுகளை வாங்கி இவரை நம்பிக்கையான இயக்குனராகவும் திரைத்துறையில் மாற்றியிருக்கிறது.


பல படங்களில் எதிர் நாயகனாக நடித்து வரும் கலை இயக்குனரும் நடிகருமான DRK கிரணை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் முழுநீள நகைச்சுவை நாயகனாக மாற்றி இயக்கியிருக்கிறார். 
அந்த குறும்படத்திற்கு அல்வா என்று சூட்டியிருக்கிறார்

35 வயது வரை கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஹீரோவுக்கு 22 வயதுள்ள இளம் அழகான பெண்ணை மணமுடித்து வைத்து, மொத்த குடும்பமும் சேர்ந்து இருவருக்கும் முதலிரவு நடத்த விடாமல் நடத்தும் கலாட்டாவை நகைச்சுவை கலந்த பின்னணியில் உருவாக்கியுள்ளார் 
மற்றும் அவருடன் முக்கிய கேரக்டரில் டெல்லி கணேஷ் அவ்வை சண்முகியின் காதலன் ஆக நடிக்க மற்றும் அவரது மகன் மகா, கதையின் நாயகியாக வெண்பா, பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 

பல படங்களில் பாடல் எழுதிவரும் ஞானகரவேல் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.கலை இயக்குனராக பிரியா சுதர்சன், ஒளிப்பதிவாளர் தினேஷ், எடிட்டர் தியாகு, இசையமைப்பாளர் சோகன் பாபு மற்றும் ரோஹித் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். 
இதில் நடிகர் தம்பி ராமையா ஒரு பாடலை பாடி அசத்தி இருக்கிறார். 24 நிமிடம் ஓடக்கூடிய  நகைச்சுவை கொண்ட குறும்படம் விரைவில் வெளியாகிறது.

Most Popular

Recent Comments