தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அவன் இவன்’ . இத்திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்தனர் என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. நிஜ வாழ்க்கையில் ஆர்யா மற்றும் விஷால் நெருங்கிய நண்பர்கள்.
தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
“மினி ஸ்டுடியோஸ் தமிழில் தயாரிக்கும் நான்காவது படமாகும். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இந்த படம் மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஒன்பதாவது தயாரிப்பு ஆகும். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இத்திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது.
இந்த நிலையில் இப்படத்தின் இன்டரோ பாடலை மிக பெரிய பொருட்செலவில் ஹைதெராபாத் ரமோஜி ஸ்டுடியோவில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். இப்பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இந்த செய்தியை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
A Mass Opening song sequence successfully choreographed by @BrindhaGopal1 😊
Mucic by @MusicThaman 💪
Lyrics by @TherukuralArivu 👍🏿#Vishal30 #Arya32 💥@arya_offl @anandshank @VishalKOfficial @MiniStudio_ @mirnaliniravi @RDRajasekar@RIAZtheboss pic.twitter.com/2LJ7q7PvkN— Vinod Kumar (@vinod_offl) October 28, 2020