இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது.
தளபதி விஜய் நடித்த குருவி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின், அதன் பின் 2012ம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்திற்குக் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு உதயநிதியை தொடர்ந்து பல படங்கள் நடிக்கச் செய்தது.
அவர் தற்போது தன்னை ஒரு நல்ல நடிகராக மெருகேற்றிக் கொண்டுள்ளார். தொடர்ந்து மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ என கதைஅம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்ல.
இயக்குனர் மகிழ் திருமேனி தடையற் தாக்க, மீகாமன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கிய ‘தடம்’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அருண் விஜய் யின் சினிமா பயணத்தை ஒரு படி இப்படம் நகர்த்தி சென்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.