இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் திருமணம் இன்று (அக்டோபர் 28) மிக எளிமையாக நடந்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள “சுல்தான்” திரைப்படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். பிரபல நடிகை ராஷ்மிகா தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
.
இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். ‘சுல்தான்’ படப்பிடிப்பின்போதே இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.திருமனத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு நேரில் வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிவகார்த்திகேயன் உடன் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் ரெமோ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்
