பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் ஆயுத பூஜை என்பதால் வீட்டில் சண்டை, சர்ச்சரவுகள் இல்லாமல் போட்டியாளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என வானத்தைப்போல படத்தில் வருவது போன்று குடும்பத்துடன் குதூகலமாக இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன் முறையாக தொடர்ந்து 4 மணி நேரம் நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் அனிதா அழ ஆரம்பித்துவிட்டார். உண்மையில் அனிதாவால் எந்த ஒரு தோல்வியும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அழ ஆரம்பித்து விடுகிறார். தான் தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவமும் அவரிடம் இல்லை. ஏந்நேரமும் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பாலா வீட்டில் உள்ள போட்டியாளர்களை அடுத்த வராம் முழுக்க “உட்காரவச்சு அம்மி அரைக்க விடுவேன்” என சொன்னதை அர்ச்சனா , ரியோ , நிஷா , வேல்முருகன் உள்ளிட்ட குரூப்பிஸம் டீம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அவரை கண்டித்து தீட்டுகிறார்கள். முழு நிகழ்ச்சியை பார்த்தால் தான் என்ன நடந்தது என அனைவருக்கும் தெளிவாக புரியும்.
#Day23 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/m3XbHpWQMm— Vijay Television (@vijaytelevision) October 27, 2020