3, மயக்கம் என்ன, கோ, தானா சேர்ந்த கூட்டம், காப்பான் என பல படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக அதாவது கலை இயக்குனராக பணியாற்றிய டி.ஆர்.கே.கிரண் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு வேலையில்லா பட்டதாரி, கோ, குட்டி புலி, வேதாளம், கதகளி, காப்பான் என பல திரைப்படங்களில் சிறு வேடமாக இருந்தாலும் வில்களின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பூத கண்ணாடி பிக்சர்ஸ் வழங்கும், கே.தருணின் தயாரிப்பில், ஜே.எம்.ராஜா எழுத்து இயக்கத்தில், ரோஹித் ஜி-சோகன்பாபுவின் இசையில், தியாகுவின் எடிட்டிங்கில், தினேஷ் தங்கராஜ் ஒளிப்பதிவில் டி.ஆர்.கே.கிரண் கதாநாயகனாக களம் இறங்கும் திரைப்படம் “அல்வா”.
அல்வா படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் நேற்று (அக்டோபர் 26) வெளியானது. விக்னேஷ் சிவன், ஜீவா என பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.