நடிகை காவேரி கல்யாணி, தளபதி விஜய் யின் 25வது படமான “கண்ணுக்குள் நிலவு” , சமுத்திரம் மற்றும் சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். அவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இன்று அதை முன்னிட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,
“எனது பிறந்தநாளன்று அன்பின் வாழ்த்துகளைத் தெரிவித்த திரைத்துறை சகாக்களும், எனது நலன் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா பெருந்தொற்று காலத்தை, எங்களது திரைக்கதையை மேம்படுத்த பயன்படுத்திக் கொண்டோம். எங்களின் முயற்சிக்கு நற்பலன் கிடைத்துள்ளது. முன்பைவிட கதை சீராகவும், சிறப்பாகவும் உருவாகியுள்ளது.
ஆகையால், படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்.ஆயுதபூஜை நன்நாளில், இப்படத்திற்கான இசைக்குழுவை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
தெலுங்கில், ஸ்ரீவென்னிலா சீதாராம சாஸ்திரி பாடல்களை வடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம்.
அதேபோல், படத்தில் எங்களோடு பயணிக்க இசைவு தெரிவித்து, அழகிய பாடல்களை எழுதிக் கொடுத்து ஆசிர்வதித்துள்ள கவிஞர்கள் சந்திர போஸ் அவர்கள், பாஸ்கரபாட்லா அவர்கள், ராமஜோகயா சாஸ்திரி காரு மற்றும் கிருஷ்ண காந்த் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். படத்தில் இணையவுள்ள மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது நாங்கள் தெரிவிக்கிறோம். எங்கள் பயணத்தில் தங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” என காவேரி கல்யாணி கூறியுள்ளார்.
#K2KProductions Wishing All
a #HappyDussehra @ChethanCheenu @K2KProduction #ProductionNo1 #MultilingualFilm
Music Production Begins Today@achurajamani @sirivennela1955 @boselyricist @bhaskarabhatla @ramjowrites #KrishnaKanth
#Dussehra #StayTuned pic.twitter.com/DDOFcPuBxp— Kaveri Kalyani (@kaverikalyani) October 25, 2020