V4UMEDIA
HomeNewsKollywoodஇப்போ போட்றா பால - மாஸ் காட்டிய சிம்புவின் ஈஸ்வரன் மோஷன் போஸ்டர்

இப்போ போட்றா பால – மாஸ் காட்டிய சிம்புவின் ஈஸ்வரன் மோஷன் போஸ்டர்

தமிழ் சினிமாவில முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மாறுபட்ட தோற்றத்துக்கு மாறியிருக்கிறார்.

சிம்புவின் 46-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி அந்த படத்திற்கு ஈஸ்வரன் என்று தலைப்பு வைத்துள்ளனர். கிராமத்து கதையாக உருவாகும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு தனது கையில் பாம்பை பிடித்திருக்கிறார். மோஷன் போஸ்டரில் இப்போ போடுங்கடா பால என்று பின்னணியில் சிம்புவின் குரல் கேட்கிறது. மேலும் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Image

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார்.

Image

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். டி கம்பெனி கே.வி.துரை, எம்.டி.எம்.ஷர்புதின் தயாரிக்கும் இந்த படத்தை மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா வழங்குகிறார்.

சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments