பிரபல தென்ந்தியா நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் (1.2 கோடி) பாலோவர்களைப் பெற்றுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
நாக சைதன்யா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் , அல்லு அர்ஜுன் என பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் தான். கடைசியாக அல்லு அர்ஜுன் உடன் நடித்த ‘ஆலவை குண்டபுரம்லோ’ மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோ வெளியிட்டு வரும் பூஜாவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அதனால் தான் 1 கோடிக்கும் அதிகமான இதயங்களை வென்றுள்ளார். தற்போது பூஜா இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 12 மில்லியன் பாலோவர்ஸ்களை / ரசிகர்களை பெற்றுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள பூஜா “நன்றி ! நான் முழுமையாக நடிக்க ஆரம்பித்த கடந்த 3-4 ஆண்டுகளில் சமூக வலைத்தளங்களில் பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும், நிறைவேற்ற நிறைய இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
Thank you 😊🙏🏻 Can’t express the love I have got on social media mainly in the last 3-4 years since I’ve been working FULL ON… still a long way to go, loads to accomplish..but grateful to my fans ❤️ https://t.co/t1BkBnqX1F