V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜய் யின் ரூட்டை மாற்றிய திருமலை ! 17வது ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள் !

தளபதி விஜய் யின் ரூட்டை மாற்றிய திருமலை ! 17வது ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள் !

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “திருமலை” படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.ரொமாண்டிக் காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக மக்கள் மத்தியில் வலம் கொண்டிருந்த விஜய்யை முழு நீள ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது திருமலை படம்.

புதுமுக இயக்குனரான ரமணா இயக்கிய இந்த படத்தை கே.பாலச்சந்தர் கவிதாலயா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தது.ஜோதிகா, கௌசல்யா, ரகுவரன் மற்றும் மனோஜ் நடித்த இந்த படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

.

இதைக் குறிப்பிடும் விதமாக அந்த படத்தின் இயக்குனர் ரமணா ’17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் எங்கள் திருமலை திரையைத் தொட்டது…என் வாழ்வுக்கான விதையை திரைத்துரை நட்டது. உடனிருந்த அத்தனை கலைஞர்களுக்கும், எங்களை உயர்த்திய ஒவ்வொரு ரசிகர்கருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.’ என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி அன்று வெளிவந்த திருமலை இதற்கு முன் வெளிவந்த அனைத்து விஜய் படங்களின் வசூலை முறியடித்து மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
#17YearsOfThirumalai 

Most Popular

Recent Comments