தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது “சூரரை போற்று”.
இந்த படம் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சுதா கோங்குரா இயக்கியுள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரிப் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 2டி என்டேர்டைன்மெண்ட் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கினால் திரையரங்கில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடி ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் சூர்யா. உலகம் முழுவதும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியாகவுள்ளது. சூரரைப் போற்று படத்திலிருந்து ஏற்கனவே 3 பாடல்கள் மற்றும் “மேக்கிங் ஆஃப் மாறா” காணொளியின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 23) அருண் ராஜா காமராஜ் வரிகளில், கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா குரலில் “ஆகாசம்” பாடல் சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியானது. வெளியான ஒரே நாளில் “ஆகாசம் எப்போதும் பொதுதாண்டா இங்க” பாடல் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.