கோலிவுட் நடிகர்களில் ட்விட்டர் & பேஸ்புக்கில் அதிக பாலோவர்ஸ் பெற்று நடிகர் தனுஷ் முதலிடம் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் . இவர் நடித்து முடித்த ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளியாக இருக்கிறது .
தனுஷ் கோலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் , பாலிவுட் என கொடிகட்டி பறக்கிறார். இவருக்கென ரசிகர் பட்டாளமே வேற லெவல் என்றே சொல்லலாம் . இவரின் ட்விட்டர் பக்கத்தை 9 .3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள் . மேலும் பேஸ்புக் பக்கத்தை 6 .5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். தமிழ் சினிமா நடிகர்களில் அதிக பேரால் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ன் பக்கத்தில் பின்தொடரும் நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார் . இந்த சாதனையை தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர் .