V4UMEDIA
HomeNewsKollywoodதீபாவளிக்கு ரிலீஸாகும் நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்"!

தீபாவளிக்கு ரிலீஸாகும் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்”!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. பிகில் உலகமெங்கும் 300கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி 29ம் தேதி வெளியிட்டனர் படக்குழுவினர்.

Image

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படங்களை வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்ற சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளன.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தை பெரும் பொருட்செலவில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.

Most Popular

Recent Comments