கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ திரைப்படம் பல மாத போராட்டங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன்பு தான் ஷூட்டிங் முடிந்தது. படம் தொடங்கிய நாளிலிருந்தே படத்திற்கு நாளுக்கு நாள் பிரச்சனை புதுசு புதுசாக ஏற்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த நிலையில், இந்த படத்தின் எடிட்டிங் பணிகளும் 90% முடிந்துவிட்டது என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இன்று (அக்டோபர் 16) முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், முதலில் கார்த்தி தனது பகுதியின் டப்பிங் பணியை பேசவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் முதல் லுக் வரும் அக்டோபர் 26ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் ராஷ்மிகா மந்தனா க்கு இது தான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.