V4UMEDIA
HomeNewsKollywoodகையில பேட் மற்றும் அழுக்கு வேட்டியுடன் வெளியான சிம்புவின் புகைப்படம் !

கையில பேட் மற்றும் அழுக்கு வேட்டியுடன் வெளியான சிம்புவின் புகைப்படம் !

‘ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என இரண்டு படங்களைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ மற்றும் சசி – ஹரிஷ் கல்யாண் இணையும் படம் என நான்கு படங்களை தயாரித்துள்ளது மாதவ் மீடியா.

தற்போது தங்களுடைய தயாரிப்பில் ஐந்தாவதாக உருவாகும் பிரம்மாண்ட படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சிம்பு, இந்தப் படத்துக்காக உடல் இழைத்து முழுமையாக தன்னை அர்ப்பணித்து தயாராகியுள்ளார்.

இதில் பாரதிராஜா, நித்தி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி என தொழில்நுட்பக் குழுவினரும் இந்தப் படத்துக்கு வலுவாக அமைந்திருப்பதால் வெற்றி என்பது உறுதியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்து மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. 2021ம் ஆண்டு மக்களை மகிழ்விக்க இந்தப் படம் வெளியாகவுள்ளது.




தற்போது படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தெரு கிரிக்கெட் போட்டிகளை பற்றிய கதைக்களம் போன்று தெரிகிறது. 


Image

அதற்கு ஏற்றாற்போல கிரிக்கெட் மட்டை மற்றும் அழுக்கு வேட்டியுடன் மைதானத்திற்குள் நுழைவது போன்ற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் வரும் அக்டோபர் 26 அன்று சரியாக 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments