செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”
எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. அதிதி ராவ், மஞ்சிமா மோகன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.
இந்த நிலையில் துக்ளக் தர்பார் படத்திலிருந்து அதிதி ராவ் விலகியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “கொரனோ வைரஸ் காரணமாக 6 முதல் 8 மாதங்கள் சினிமா முடங்கியிருந்த நிலையில் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால் புதிய படத்தில் கமிட்டாவதை விட ஏற்கனவே பாதியில் இருக்கும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக துக்ளக் தர்பார் படத்தில் இருந்து விலகினேன். இருப்பினும் இந்த படத்தில் இணைந்து உள்ள ராஷிகண்ணாவுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்றும் விஜய் சேதுபதி உள்பட இந்த படத்தில் அனைவருடனும் பணிபுரியும் வாய்ப்பை இழந்தது எனக்கு வருத்தமான ஒன்று என்றும் இருப்பினும் விரைவில் இதே குழுவுடன் நான் மீண்டும் இணைவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என கூறியுள்ளார்.