இயக்குனர் அமீரின் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. அப்பா , அண்ணன் , அண்ணி என மிகப்பெரும் நட்சத்திர குடும்பத்தில் இருந்து சினிமாவில் நுழைந்தாலும் ஆயரத்தில் ஒருவன், கைதி, பையா, நான் மகான் அல்ல, கடைக்குட்டி சிங்கம், மெட்ராஸ் , சிறுத்தை என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கான தனி மார்க்கெட்டை உருவாக்கினார். தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு சினிமாவிலும் தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கி கொண்டார்.
நடிகர் கார்த்தி கடந்த 2011ம் ஆண்டு ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உமையாள் என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார். இதையடுத்து லாக்டவுனில் மீண்டும் அம்மாவான ரஞ்சனியை கார்த்தி அவரது சொந்த ஊருக்கு கூட்டி சென்று பாதுகாப்பாகவும், மிகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொண்டடார்.
இந்நிலையில் கார்த்தி – ரஞ்சனி தம்பதித்துக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளான். இந்த மகிழ்ச்சியான செய்தியை (அக்டோபர் 20) ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி, மனைவிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் , செலவிலியர்களுக்கு நன்றி கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் சிறுத்தைக்கு குட்டி சிறுத்தை பொறந்தாச்சு என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அவரது அண்ணன் பிரபல நடிகர் சூர்யாவும் ட்விட்டரில் இந்த சந்தோஷ செய்தியை பகிர்ந்துள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.