Home News Kollywood விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த ரசிகர்கள் !

விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த ரசிகர்கள் !

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான “800” படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் படத்திலிருந்து விலகினார். இதற்கு கேட்ட கேள்விக்கு, மீடியாவிடம் “நன்றி, வணக்கம்” என மழுப்பிவிட்டு சென்றார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல தரப்பட்ட ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ( அக்டோபர் 19 ) விஜய் சேதுபதியை படத்திலிருந்து விலகி கொள்ள அறிவுறுத்தி முரளிதரன் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்து ‘நன்றி.. வணக்கம்’ என கூறியிருந்தார் விஜய் சேதுபதி.

அதற்கு அவர் ‘நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம். இனி அதை பற்றி பேசுவதால் எந்த பயனும் இல்லை.. விடுங்க’ என விரக்தியாய் சொல்லி விட்டு பத்திரிக்கை நண்பர்களை மழுப்பி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இருக்கும் சில தாழ்வு மனப்பான்மை கொண்ட உள்ளங்கள் ட்விட்டர் பதிவுகள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றன. இது சம்மந்தமாக ஒருவர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் விதமாக வெளியான பதிவு அனைவருக்கும் ஆத்திரத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடு எங்கு செல்கிறது என ஆதங்கப்பட்டு பேசி வருகிறார்கள். பல முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த ஆபாச மற்றும் கீழ்த்தரமான டீவீட்டை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Image