தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பெரும் பேச்சு பொருளாக கடந்த வாரம் இருந்தது முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்பது தான்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இவ்வளவு ஏன் விஜய் சேதுபதி ரசிகர்களே இதில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதிகு எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ஓரிரு நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி ஒரு இணையற்ற, சிறந்த கதை கொண்ட தனித்துவமான கதையான முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று ஒரு இலங்கை மீடியாவுக்கு விஜய் சேதுபதி பேட்டியளித்த நிலையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று முத்தையா முரளிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டது. என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படுவதை நான் விரும்பவில்லை மற்றும் அதை என்னால் ஏற்கவும் முடியவில்லை. அவரது கலைவாழ்வில் என்னால் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இத்திரைப்படத்திலிருந்து அவரை விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதற்கு விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் “நன்றி வணக்கம்” என பதிவிட்டுள்ளார். எனவே முத்தையா முரளிதரனின் 800 படத்திலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.

















