தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. பிகில் உலகமெங்கும் 300கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரளா. அவர் முதன் முதலில் அறிமுகமானதும் மலையாள சினிமா தான். இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் கவிதாலயா தயாரிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற “ஐயா” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகை என்ற பெருமை நயன்தரவையே சேரும்.
கடந்த ஆண்டு மலையாளத்தில் பிரபல நடிகர் நிவின் பாலியுடன் “லவ் ஆக்ஷன் டிராமா” என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் இப்போது அவர் புதிதாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் அப்பு என்.பட்டாதிரி முதல் முறையாக இயக்கும் இந்த படத்தில் குஞ்சக்கோ போபனுடன் நடிக்க உள்ளார்.