தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்’காக்கா முட்டை’ திரைப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
இதன் பின் ஆறாது சினம், தர்ம துரை, லட்சுமி, சாமி 2 , செக்க சிவந்த வானம், வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, ரணசிங்கம் எனப் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகப் வலம் வருகிறார்.
இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் 24 படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரின் 25வது படத்திற்கு ‘பூமிகா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரதீந்திர பிரசாத் இயக்க பிரித்வி சந்திர சேகர் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழில் முதல் படமாக நடிகை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29-ஆம் தேதி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் ஜூன் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. சூர்யாவின் சூரரை போற்று படத்தை அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30 ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 25வது திரைப்படமான ‘பூமிகா’ என்ற திரைப்படமும் ஓடிடியில்
ரிலீசாக பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ( அக்டோபர் 19 ) இப்படத்தின் பிரஸ்ட் லுக்கை பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.