Home News மாரடைப்பினால் இறந்த உத்தம புத்திரன் நடிகர் ! திரை உலகம் இரங்கல்

மாரடைப்பினால் இறந்த உத்தம புத்திரன் நடிகர் ! திரை உலகம் இரங்கல்

பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

74 வயதான அவர், வெங்கடேஷ் ஹீரோவாக நடித்த பிரம்மபுத்ருடு என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் பாலகிருஷ்ணாவின் சமரசிம்மா ரெட்டி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தெலுங்கு மட்டுமில்லாமல், தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் ஆஞ்சநேயா படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆறு, தர்மபுரி, அதன் பின் தனுஷின் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்தார் .

Image

இவரது மரணத்தை கேள்விப்பட்ட தமிழ், தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.