சிங்கம், தீரன் ஆதிகாரம் ஒன்று, தலை நகரம், சிவாஜி மற்றும் கோ போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகர் போஸ் வெங்கட் சமீபத்தில் கன்னி மாடம் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
கன்னி மாடம் கடந்த பிப்ரவரி 21 அன்று வெளயிடப்பட்டது. தனது முதல் படத்திலேயே துணிச்சலான கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட். இந்த படத்தை ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் முகமது ஹஷீர் தயாரித்துள்ளார். ஹரி சாய் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் , சாயாதேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், சூப்பர் குட் சுப்ரமணி, பிரியங்கா சங்கர், வலினா பிரின்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாதி மற்றும் ஆணவக்கொலை பற்றி பேசிய கன்னி மாடம்.
கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் ஒவ்வொரு வருடமும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெற உள்ள இந்த டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கன்னி மாடம்” தமிழ் திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை படக்குழு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.