2012ம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக கால் பதித்தார் வரலட்சுமி சரத்குமார். தரமான கதைக்களம் மற்றும் தனது ரோல் நன்றாக இருந்தால் மட்டுமே நடிப்பார். கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 20 படங்களில் நடித்துள்ளார். தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டைக்கோழி-2, சர்க்கார், மாரி-2 என பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஒரே நேரத்தில் 8க்கும் அதிகமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் வரலட்சுமி. அவர் இயக்கும் முதல் படத்திற்கு ‘கண்ணாமூச்சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வைரலாகி வருகிறது. தளபதி விஜய் யின் மனைவி சங்கீதா, சூர்யாவின் மனைவி ஜோதிகா, இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி, ஹன்சிகா, கிக்கி விஜய், ரித்விகா, டாப்ஸீ, அதிதி ராவ், ஆண்ட்ரியா, தமன்னா, சுஹாசினி மணிரத்னம், சோனியா அகர்வால், ரெஜினா, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அக்ஷரா ஹாசன், மஞ்சிமா மோகன், டிடி, சாயீஷா, சிம்ரன், ரகுல் ப்ரீத் சிங், புஷ்கர் – காயத்ரி என 30 பேருக்கும் மேற்பட்டவர்கள் ரிலீஸ் செய்துள்ளனர்.
தளபதி விஜய்யின் நடிப்பில் 2017ம் ஆண்டு தீபாவளிக்கு வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘மெர்சல்’ படத்தை தயாரித்த “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்” நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனார். மெர்சல் வெளிவந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில் கதையம்சம் கொண்ட படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.















