V4UMEDIA
HomeNewsKollywoodவிஷால் -ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம் ! தயாரிப்பாளர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

விஷால் -ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம் ! தயாரிப்பாளர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அவன் இவன்’ . இத்திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்தனர் என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. நிஜ வாழ்க்கையில் ஆர்யா மற்றும் விஷால் நெருங்கிய நண்பர்கள்.

தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மினி ஸ்டுடியோஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

Avan Ivan - Wikipedia

“மினி ஸ்டுடியோஸ் தமிழில் தயாரிக்கும் நான்காவது படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இந்த படம் மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஒன்பதாவது தயாரிப்பு ஆகும். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.





இத்திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் பூஜையுடன் விரைவில் துவங்க இருக்கிறது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்”என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments