பிக் பாஸ் சீசன் 4 தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 1 வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க புதிய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களுக்குள் போட்டியை வரவைத்துள்ளார் பிக்பாஸ். அத்துடன் நாமினேஷன் ஆரம்பமாகியுள்ளதால் இனி ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலே தொகுப்பாளினி அர்ச்சனா பங்கேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியது. அர்ச்சனா எப்போது உள்ளே வருவார் என காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது விஜய் டிவி.
இதனால் இந்த சீசன் வேற லெவலில் இருக்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் தற்ப்போது இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் புதுவரவாக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனை நுழைந்து செம சர்ப்ரைஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர் மற்றும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
#Day11 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/wylfUD9TvT— Vijay Television (@vijaytelevision) October 15, 2020
இனிமேல் நிகழ்ச்சி கலகலப்பா போகும் என எதிர்பார்க்கலாம். அர்ச்சனா வந்த சிறிது நேரத்திலே ரியோ உடன் சேர்ந்து சுரேஷை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார். இனி சூடு பிடிக்கும் என நம்பலாம்.