நடிகர் கிங் காங், சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுடன் நடித்த “அதிசய பிறவி” படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பிரேக் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ இன்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்படும். இந்நிலையில் மாற்றுத் திறனாளியான அவர் சினிமா துறையில் சாதித்ததற்காக 2009ம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.
இதையடுத்து தன் முதல் படத்தின் நாயகன் ரஜினியோடு அந்த விருதோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அது நடக்கவில்லை. பல வருடங்களாக முயற்சி செய்தும் அவர் நினைத்தது கை கூடவில்லை. இது பற்றி இணையதள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அது எப்படியோ பரவி சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சென்றுவிட கிங்க் காங்குக்கு போன் செய்து பேசியுள்ளார் ரஜினி.
அப்போது கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பின்னர் கண்டிப்பாக குடும்பத்தோட சந்திக்கலாம். வீட்டிற்கு குடும்பத்தோடு வாருங்கள் என சூப்பர்ஸ்டார் ரஜினி உறுதியளித்துள்ளாராம்.