விஷால் நடித்த ‘சக்ரா’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் விரைவில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது என தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து விஷாலின் ‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மீதம் இருந்ததாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை அடுத்து நேற்றுடன் ‘சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முற்றிலும் முடிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
.
இதனை அடுத்து விஷால் மற்றும் இயக்குனரிடம் படக்குழுவினர் விடைபெற்று சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வைரலாகி வருகிறது.
We have successfully wrapped up shoot of #Chakra. The Game Begins. Single track release soon…GB@VishalKOfficial @thisisysr @ShraddhaSrinath @AnandanMS15 @balasubramaniem @ReginaCassandra @VffVishal @johnsoncinepro @baraju_SuperHit pic.twitter.com/xTfskJZ2Ie— VISHAL FANS KERALA (@kerala_and) October 11, 2020
ஏற்கனவே இப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் கொரோனா விடுமுறையில் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படம் ஒரு வாரம் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் செய்தால் ரிலீசுக்கு தயாராகி விடும். ஆனால் நீதிமன்றத்தில் இந்த படத்தின் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகே ஓடிடி அல்லது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்