இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரானவாத் நடித்து வரும் “தலைவி” படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடாங்கியுள்ளது.
பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிரபல நடிகையான கங்கனா ரானவாட் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமான “தலைவி” படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் FEFSI ஊழியர்களுக்கு 5 லட்சம் மற்றும் தலைவி படத்தில் பணிபுரியும் தினசரி தொழிலர்களுக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் இப்பபடத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. தலைவி பட செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பிரத்தியோகமாக பகிர்ந்திருக்கிறார் கங்கனா ரனாவத். “ஜெயாம்மாவின் ஆசீர்வாதத்துடன் மேலும் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்” என கூறியுள்ளார்.
