2012ம் ஆண்டு வெளிவந்த கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் விக்ரம் பிரபு. இத்திரைப்படத்தை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கி இருந்தார். நடிகர் செவாலியர் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபல நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தனது அறிமுக படத்திலேயே அறிமுக நாயகருக்கான சிறந்த விருதை பெற்றுள்ளார். இமான் இசையில் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது நாம் அனைவரும் அறிந்ததே.
விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் இணைந்து நடித்த கும்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்தது. விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் என இருவருக்குமே இது அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த இருவரும் புதிய திரைப்படத்திற்காக இணைகிறார்கள். சன் குழுமம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை “கொம்பன்” பட புகழ் இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.நடிகை லட்சுமிமேனன் தனது உடல் எடையை குறைத்து சமீபத்தில் பல புகைப்படங்கள் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மீண்டும் விக்ரம் பிரபுவோடு இவர் இணைந்து நடிக்கப் போகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


























