திருப்பதி ,மதுரை சுவாமி தரிசனம் ! நாளை முதல் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு.
மதுரையில் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ள அவர், இன்று மாலை படப்பிடிப்பு தளத்துக்கு செல்கிறார்.சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார் . தமன் இசை அமைக்கிறார். இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சிம்பு இன்று மதுரையில் உள்ள பிரபல மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.நாளை திண்டுக்கல் அருகிலுள்ள வாடிப்பட்டியில் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க இருக்கிறார்