மலையாள திரையுலகின் பிரபல நடிகர் பகத் பாசில். இவரது நடிப்பிற்கு கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரிய ரசிக பட்டாளமே உள்ளது.
ஃபகத் பாசிலின் நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள திரைப்படம் ஜோஜி. இது ஷேக்ஸ்பியரின் “தி டிராஜடி ஆஃ ப் மேக்பெத்” என்னும் நாவலை தழுவிய கதை என கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஷேக்ஸ்பியர். இவர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். இவர் பல உலகப் புகழ்பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். அதில் ஒன்றாகிய மேக்பத் என கூறப்படும் ” தி டிராஜடி ஆப் மெக்பெத்” என்னும் நாவல் துன்பியல் வகையைச் சேர்ந்தது. இது உரிமையுள்ள மன்னரைக் கொலை செய்வது மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய கதையாகும். அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த கதை உலகம் முழுவதும் மிக பிரசித்தி பெற்றது.
இது 1603லிருந்து 16077ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடக்கும் கதை.
இந்த நாவலின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் ஜோஜி. இந்த திரைப்படத்தில் ஃபகத் பாசில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை திலீஸ் போத்தன் அவர்கள் இயக்குகிறார் மேலும் இந்த திரைப்படத்திற்கு சியாம் புஷ்கரன் அவர்கள் திரைக்கதை எழுதியுள்ளார்.
ஃபகத் ஃபாசில், திலீஷ் பொதன் மற்றும் ஷாம் புஷ்கரன் ஆகியோரது கூட்டணியில் மகேஷின்டே பிரதிகாரன் என்ற திரைப்படம் ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த மூவர் கூட்டணியில் தங்கம் என்ற படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது சில பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.