இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரானவாத் நடித்து வரும் “தலைவி” படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடாங்கியுள்ளது.
பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிரபல நடிகையான கங்கனா ரானவாட் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமான “தலைவி” படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் FEFSI ஊழியர்களுக்கு 5 லட்சம் மற்றும் தலைவி படத்தில் பணிபுரியும் தினசரி தொழிலர்களுக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கங்கனா ரனாவத். இது மட்டுமின்றி ‘அனைவருக்கும் காலை வணக்கம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஏ எல் விஜய்யுடன் காட்சி பற்றிய ஆலோசனை. இந்த உலகத்தில் எவ்வளவோ அருமையான இடங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த இடம் படப்பிடிப்பு தளம் தான்’ என கூறியுள்ளார்.