நடிகர் பிரகாஷ் ராஜ் விடுத்த க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று நடிகை த்ரிஷா மரக்கன்றுகளை நட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் செடி ஒன்றை நட்டு அதைப் புகைப்படமாக வெளியிட்டு அதில் நடிகர் விஜய்யை டேக் செய்து அவரையும் இந்த சேலஞ்சில் கலந்துகொள்ளும்படி கேட்டிருந்தார். அதன்படி தளபதி விஜய்யும் அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆனது. அதை பார்த்து தளபதி விஜய் யின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் செடி நட்டு பெரும் புரட்சியை செய்தனர்.
இந்நிலையில் இப்போது நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுடன் செடி நடும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மோகன் லால் ஆகியோரையும் கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் பிரகாஷ் ராஜின் சவாலை ஏற்ற நடிகை திரிஷா மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்களால் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
I accepted the #GreenIndiaChallenge and planted two saplings today.
I request you all to do your bit and help towards a greener India🌱 pic.twitter.com/poz7r3kRRV— Trish (@trishtrashers) October 3, 2020