பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதை பொருள் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பல பாலிவுட் பிரபலங்களுக்கு போதை பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சுஷாந்த் சிங் காதலி ரியா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து நடிகை சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் என பல பாலிவுட் நடிகைகளிடம் சிபிஐ விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் விசாரணையில் நடிகை சாரா அலி கான் தான் சுஷாந்த் சிங்குடன் டேட்டிங் சென்றதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாரா அலி கானும், சுஷாந்த் சிங்கும் ‘கேதர்நாத்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். அந்த சமயத்தில் இருந்தே இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா இல்லை தற்கொலை செய்துகொண்டாரா என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு நடைபெற்றது. இதில் எய்ம்ஸ் ஆய்வுக் குழு தெரிவித்த தகவலின்படி சுஷாந்த் கழுத்து நெறித்து கொல்லப்படவில்லை இது தற்கொலை தான் என கூறியுள்ளது.