இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் “துருவ நட்சத்திரம்” படம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அப்படத்தை வெளியிட முடியாமல் திணறுகிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன்.
தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா, சீயான் 60 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் 1 படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
படம் இத்தனை வருடம் தாமதம் ஆனதுக்கு காரணமே கௌதமின் அலட்சியம் தான். துருவ நட்சத்திரம் படம் ரிலீஸாக வேண்டுமென்றால் இன்னும் சில நாட்கள் விக்ரம்மை வைத்து கௌதம் மேனன் ஷூட் செய்ய வேண்டும். ஆனால் கௌதம் மேல் செம கோபத்தால் உள்ளார் விக்ரம்
.தொடர்ந்து தனது கால்ஷீட்டை சொதப்புவது மற்றும் பேசிய சம்பளத்தை தராமல் இழுத்து அடிப்பதால் கறாராக “நோ” சொல்லிவிட்டாராம் விக்ரம். இந்நிலையில் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மனம் என்ற சிங்கிள் பாடலை விரைவில் ரிலிஸ் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கௌதம் மேனன்.