தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்கள் பட்டியலில் எப்போதுமே விஜய் சேதுபதி அவர்களுக்கு தனி இடம் உண்டு. நடிப்பது மட்டுமின்றி கதை எழுதுவது, படங்கள் தயாரிப்பது என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இத்

ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய், பக்ரீத், மார்ஸ் போன்ற சில படங்களுக்கு கதைக்கு உதவியாக இருந்துள்ளார். இது மட்டுமின்றி இயக்குனர் சஞ்சீவ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கும் விளையாட்டு சம்மந்தப்பட்ட படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். இந்நிலையில் நடிகர் விமல் நடிக்கும் “குலசாமி” படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார். இப்படத்தை தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சரவண சக்தி இயக்க உள்ளார்.