V4UMEDIA
HomeNewsKollywoodஓடிடியில் பாலாவின் 'வர்மா': ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் பாலாவின் ‘வர்மா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான ‘வர்மா’ திரைப்படம் தனக்கு திருப்தி இல்லாததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என துருவ் விக்ரம் தந்தையும், பிரபல நடிகருமான விக்ரம் கூறியதால் அப்படத்தினை ரிலீஸ் செய்யாமல் இருந்தனர்.

இதனை தொடர்ந்து அந்த படம் மீண்டும் அர்ஜுன் ரெட்டி படத்தின் உதவி இயக்குனர் கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் ஆதித்யா வர்மா என்ற டைட்டிலில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் நடிப்பை அனைவரும் வெகுவாக பாராட்டினார்.


இந்த நிலையில் இயக்குனர் பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக பல மாதங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அக்டோபர் 6ஆம் தேதி இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் வர்மா எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

Most Popular

Recent Comments