நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். “மன்மதன்” படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது.
என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் திரு. கிருஷ்ணகாந்த் அவர்கள். “மன்மதன்” படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க ..இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்.
-சிலம்பரசன் T R .