V4UMEDIA
HomeNewsKollywoodசிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க கேயார் கோரிக்கை

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க கேயார் கோரிக்கை

எஸ்பிபி மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை:

எஸ்பிபி அவர்களின் மறைவுக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார்.

Image

எஸ்பிபி அவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட.

நன்றி
கேயார்
27-09-2020

Most Popular

Recent Comments