கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு நாடும் ஊரடங்கு நிலையில் இருந்த போது சினிமா பிரபலங்கள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் வீட்டினுள்ளே தனிமையில் இருந்தனர். அதனால் அந்த நாட்களை வெவ்வேறு விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தி வந்தனர்.
ஒரு சிலர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடினார். இன்னும் சிலர் விவசாயத்திற்கு திரும்பினர். வீட்டிலேயே தோட்டம் அமைப்பது, பராமரிப்பு என தங்கள் பொன்னான நேரத்தை உபயோகமானதாக மாற்றினார்கள். நடிகை சமந்தா அவர்களும் வீட்டிலேயே தோட்டம் அமைத்து காய்கறிகள், கீரை வகைகள் என்று பலவற்றை ஆரோக்கியமான முறையில் உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
அந்த வரிசையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் அவர்கள் தற்போது தனது வீட்டை ஒட்டிய இடத்தில் கரிம வேளாண்மை உற்பத்தியை மேற்கொண்டுள்ளார். இதில் கரிம உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார் என்பது மேலும் கூடுதல் சிறப்பு.அந்த புகைப்படங்களை நேற்று (செப்டம்பர் 25) தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் மோகன்லால்.
மேலும், மோகன்லால் அவர்கள் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது